பதிவு செய்த நாள்
28
நவ
2019
12:11
சபரிமலை: பக்தர்கள், தங்கள் இருமுடி கட்டில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், என, தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:பம்பையில் குளித்த பின், பக்தர்கள் ஆடைகளை ஆற்றில் வீசுவதில், எந்த ஐதீகமும் இல்லை. சபரிமலை ஆசாராங்களில், இது கிடையவே கிடையாது.சிலர் செய்த தவறை பின்பற்றி, ஏராளமானோர் அந்த தவறை செய்து வருகின்றனர். இதை, பக்தர்கள் தவிர்க்க வேண்டும். புண்ணிய நிதி பம்பையை, துாய்மையாக பராமரிக்க வேண்டும். அதுபோல, பக்தர்கள், தங்கள் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.பக்தர்கள் வீசி எறியும் பன்னீர் குப்பிகள், பிளாஸ்டிக் கவர்கள், சபரிமலையில் பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையை ஏற்படுத்துகிறது.பிளாஸ்டிக் இல்லாத சபரிமலையை உருவாக்க, பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். கடவுள் சிந்தனையை வளர்க்கவும், வாழ்க்கை முழுவதும், நம்பிக்கையின் புனிதத்தை பாதுகாக்கவும், அய்யப்ப தரிசனம் அனைத்து பக்தர்களுக்கும் வழிவகுக்கும். இவ்வாறு, அவர்கூறினார்.