இறைவன் வேறு; அவன் நாமம் வேறு அல்ல. இரண்டும் சம அளவுக்கு முக்கியத்துவம் உடையது. கட்டிப் பொன் போல அவன்; பசும் பொன் போல அவன் நாமங்கள் என்பர் பெரியோர். அதாவது, இறைவன் கட்டித் தங்கமாக இருக்கிறான். அவனது திரு நாமங்கள் ஆபரணங்கள் போன்று இருக்கின்றன. கட்டித் தங்கத்தை விட, அதைக்கொண்டு செய்யப்பட்ட ஆபரணங்களே பொதுமக்களுக்கு அதிகமாகப் பயன்படுகின்றன. அதுபோல், பரம்பொருளான இறைவனை விட, அவனது நாமமே அடியார்களுக்கு அதிகமாகப் பயன்படுகிறது.