கும்பகோணம், மணல்மேடு சாலையில் உள்ள மரத்துறையில் ஹரிஹரபுத்ர சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள விஷ்ணு துர்கை சன்னிதி விசேஷமானது. பொதுவாக, கோயில் பிராகாரத்தில் அருளும் துர்கை, இக்கோயில் நுழைவாயிலில் வடக்குத் திசை நோக்கி தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறாள். குனிந்து பார்த்தால்தான் அம்மனின் முழு உருவத்தைத் தரிசிக்க முடியும். பக்திக்குப் பணிவு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.