விக்கிரவாண்டி அருகே கார்த்திகை தீப சங்காபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2019 03:12
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டியில் கார்த்திகை தீபத்தை முன்னி ட்டு முருகன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று (டிசம்., 11ல்) காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடந்து 108 மூலிகையுடன் மகா தன்வந்திரி ஹோமம் நடந்தது.
பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் கலசா பிஷேகம் நடந்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.யாகசாலை பூஜை, அபிஷேகங்களை ஜோதிடர் கமலக்கண்ணன் தலை மையில் பனையபுரம் பாபு அய்யர் செய்திருந்தார். கொட்டியாம்பூண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங் களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.