பல்லடம் ’வனம்’ அமைப்பு சார்பில், ’மார்கழி மகத்துவம்’ குறித்த ஆன்மீக விழா, திருச்சி ரோட்டில் உள்ள வனாலயம் கட்டடத்தில் நாளை (17ம் தேதி) முதல் ஆறு நாட்கள் நடக்கிறது. தினசரி, மாலை, 5:00 மணி முதல் நடைபெறவுள்ள ஆன்மீக நிகழ்வுகளில், பல்வேறு மடாதி பதிகள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர். இதில், பொது மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.