புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுாரில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் கன்னி பூஜை நடந்தது.புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த முதலாமாண்டு சபரிமலைக்கு செல்ல மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள் சார்பில் கன்னி பூஜை நடந்தது.
அதையொட்டி நேற்று 15ம் தேதி மதியம் 2.00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, லட்சார்ச்சனை, படி பூஜை, பேட்டை துள்ளல், தீபாராதனை நடந்தது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.