திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2012 11:04
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் கர்நாடக மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் சோம்மண்ணா சாமி தரிசனம் செய்தார். காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற சனிஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு, நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திருநள்ளாருக்கு நேற்று முன்தினம் மாலை கர்நாடக மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் சோம்பண்ணா வந்தார். திருநள்ளார் கோவில் விருந்தினர் மாளிகையில் தங்கிருந்த அமைச்சர் காலை 6 மணிக்கு கோவிலுக்கு வந்தார். அமைச்சரை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கோவில் தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் வரவேற்றனர். பின் சொர்ண கணபதி, சுப்ரமணியர், தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர், பிரணாம்பிகை அம்பாளை வழிப்பட்டு சனிஸ்வர பகவானை வழிப்பட்டார். அங்கு, சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அமைச்சர் எள்தீபம் ஏற்றி வழிப்பாடு நடத்தினார். அதைத்தொடர்ந்து பரிகாரமாக காக்கைக்கு எள்சாதம் வழங்கினார். அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்றார்.