பெத்லகேமில் 2019 ஆண்டுகளுக்கு முன்பு மரியாளுக்கு ஒரு பாலகன் பிறந்தார். அவருக்கு "இயேசு கிறிஸ்து என்று பெயர். "இயேசு என்றால் "விடுதலையாக்குபவர் என்றும், "கிறிஸ்து என்றால் "தீர்க்கதரிசி என்றும் அர்த்தம். ஆம்...அவர் மக்களை விடுவிக்க சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்தார். "என்னை பாவியென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும் என்று சவால் விட்டு, பரிசுத்தராக வாழ்ந்தார். அவர் மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதை "மரித்தேன்.. ஆனாலும் உயிரோடே இருக்கிறேன் என்கிறார். ""இதோ வருகிறேன்.
அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது,”
என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் "" உன் இதயத்தை எனக்கு தா. நான் உன்னில் வந்து வாசம் செய்ய விரும்புகிறேன்” என விருப்பம் தெரிவிக்கிறார்.
அவர் குழந்தையாய் பிறந்த நன்னாளில் அவரிடம் வாழ்த்து பெறுவோம்.