அனுமன் கோயில்களில் பக்தர்களுக்கு செந்தூர பிரசாதம் தருகின்றனர். இதற்கு காரணம் தெரியுமா?
இலங்கையில் சீதையை சந்தித்த அனுமன் அவளது நெற்றியில் செந்தூர திலகம் இருப்பதை கண்டார். அதற்கான காரணத்தை கேட்டார்.
""இதை இடுவதால் என் கணவர் ராமபிரானுக்கு நலம் உண்டாகும்” என்றாள். இதைக் கேட்டாரோ, இல்லையோ, தன் உடல் முழுதும் செந்தூரம் பூசிக் கொண்டார். அதைக் கண்ட சீதை, ""ஏன் இப்படி செய்தாய்?” எனச் சிரித்தாள்.
""தாயே! நீங்கள் நெற்றியில் மட்டும் திலகமிட்டு ராமனுக்கு நன்மை உண்டாக்கினால், அவரது பக்தனான நான் உடலெங்கும் பூசினால் எவ்வளவு நன்மை உண்டாகும்?” என பவ்யமாகச் சொன்னார். பக்திக்கு இலக்கணமான அனுமனைக் கண்ட சீதை வியந்தாள். ஆண்கள் செந்துாரம் இட்டால் செல்வம், ஆன்மிக உணர்வு பெருகும். பெண்கள் இட்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.