பதிவு செய்த நாள்
26
டிச
2019
12:12
தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேனி ஸ்ரீராம் நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. காலையில் யாக பூஜையுடன் துவங்கி அனுமனுக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ஷேகம், ஆராதனை நடத்தது. வடமாலை சாத்தி வழிபட்டனர்.அல்லிநகரம் அனுமன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தேவாரம்:அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப்பெருமாள் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். மலர் அலங்காரத்தில் சுயம்பு மூேலவர் அருள்பாலித்தார். முன்னதாக உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு வடை, சர்க்கரை பொங்கல், மாலாடு பிரசாதம் வழங்கப்பட்டது. உழவார பணிக்குழுவினர் அன்னதானம் வழங்கினர்.
போடி: போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் அனுமனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. வடைமாலை அலங்காரத்தில் அனுமன் அருள்பாலித்தார். அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.
பெரியகுளம்: பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேய மூலமந்திரம் ேஹாமம் பூஜை நடந்தது.மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவர் திருப்பதி அலங்காரத்திலும் காட்சியளித்தனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினார். ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன் செய்திருந்தார்.
* வரதராஜப்பெருமாள் கோயில், வடக்குஅக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயில், தாமரைக்குளம் வெங்கிடாஜலபதி கோயில், லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.