புதுச்சேரி அருகிலுள்ள திருத்தலம் நல்லாத்தூர். இங்கு அமைந்துள்ள அருள்மிகு கண்ணபுரீஸ்வரர் கோயிலில் ஒரு சிறப்பம்சம் உண்டு. ஆமாம்; இந்தக் கோயில் மூலவரை ஜன்னல் (பலகணி) வழியாகவே வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலில் ஆயுள் விருத்திக்கான யாகங்களும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனைத் தரிசித்து வழிபாடு செய்வதுடன், தேன் அல்லது நெய்யுடன் பலாப்பழம் தானம் வழங்குவதை சிறப்பாகக் கருதுகிறார்கள் பக்தர்கள். இந்த தானத்தால், நோய்கள் யாவும் நீங்கி ஆரோக்கியமான - நீண்ட நெடிய ஆயுளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் பலரும் இந்தக் கோயிலில் பலாச்சுளையைத் தானம் தருவதைக் காணலாம்.