திருக்கோயில்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் அங்கங்களில் குறிப்பிடத்தக்கவை அதன் மண்டபங்கள். கலையம்சம் மிகுந்த சிற்பங்களுடன் கூடிய மண்டபங்களை 9 வகையாகப் பிரித்துச் சொல்கின்றன ஞான நூல்கள்.
அர்த்த மண்டபம் : மூலவர் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபம். மகா மண்டபம் : அர்த்த மண்டபத்தை அடுத்து அமைவது. ஸ்நபன மண்டபம் : அழகுற அமைக்கப்படும் இந்த மண்டபத்தில் வைத்தும் அபிஷேக - ஆராதனைகள் நிகழும். நிருத்த மண்டபம் : சிவாலயங்களில் ஸ்ரீநடராஜர் சன்னதி அமைந்திருப்பது இந்த மண்டபத்தில்தான். கல்யாண மண்டபம் : திருக்கல்யாண கோலத்தில் ஸ்வாமி-அம்பாள் இங்கு எழுந்தருள்வார்கள். நீராழி மண்டபம் : தீர்த்தக் குளத்தின் நடுவே அமைவது. தசூத்ர மண்டபம் : அதிகபட்சமாக 28 தூண்களுடன் திகழும் மண்டபம். சாதா மண்டபம் : 28,100 தூண்களுடன் திகழ்ந்தனவாம் இவ்வகை மண்டபங்கள். திவ்ய மண்டபம் : முற்காலத்தில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மண்டபங்கள் இவை. 10,81,008 தூண்களுடன் இந்த மண்டபங்கள் திகழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுவர்.