உலகளந்த பெருமாள் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2020 01:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவிலில், ஆங்கில வருட பிறப்பு மற்றும் பகல் பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு நித்யபடி பூஜைகள், 6:30 மணிக்கு தேகளீசபெருமாள், புஷ்பவல்லிதாயார் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, கண்ணாடி அறையில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் நடந்தது. பகல் 11:30 மணிக்கு சாற்றுமறை, மகா தீபாராதனை நடந்தது. ஆங்கில வருடப் பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர். ஜீயர் ஸ்ரீனிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். டி.எஸ்.பி., மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.