திண்டிவனம்:திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில், சிறப்பு உபன்யாசம் நடந்தது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திண்டிவனத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில், சிறப்பு உபன்யாசம் நடந்தது. இதில், மனவளக்கலை அறக்கட்டளை பேராசிரியர் ஆசைத்தம்பி வைணவத்தில் யோக வாழ்வினில் என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார்.வைணவர்களும் மூன்று மந்திரங்களும் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் புருஷோத்தமன் உபன்யாசம் செய்தார்.நிகழ்ச்சியில், ஆண்டாள் நாச்சியார் சபை நிர்வாகி பாண்டியன், திண்டிவனம் தமிழ்ச்சங்கத் தலைவர் துரை ராஜமாணிக்கம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் செல்வமணி உட்பட பலர் பங்கேற்றனர்.