கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 4:30 மணி அளவில் மூலவர் லட்சுமி நாராயணப் பெருமாள் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஹரி பஜனைக் குழுவினரின் பாடல்களுடன், உற்சவ மூர்த்திகள் விநாயகர் மற்றும் வெங்கடேச பெருமாள் சுவாமிகள் வீதியுலா நடந்தது. 5:00 மணி அளவில் பரமபத வாயில் திறந்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.விழுப்புரம்கோலியனுாரில் உள்ள பூமிநாயகி, ஸ்ரீநிலா நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து, வரதராஜ பெருமாள் திருப்பதி ஸ்ரீசீனுவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சின்னசேலம்கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 5:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதேபோன்று, வரதராஜ பெருமாள் கோவிலிலும், பரமபதவாசல் திறக்கப்பட்டு சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.