பாலக்காடு தர்ம சாஸ்தா கோவிலில் மகர விளக்கு மகோற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2020 10:01
பாலக்காடு: மகர விளக்கு மகோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடின. பாலக்காடு மாவட்டம் யாத்திரை சாஸ்தா நகரில் உள்ளன ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில். இங்கு எல்லா ஆண்டும் மார்கழி மாதம் ஒன்றாம் தேதி மகர விளக்கு மகா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டு உற்சவம் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கின. கடந்த 7 மணியளவில் உஷ பூஜை நடந்தன. இதையடுத்து புழுக்கள் ஸ்ரீ மகா கணபதி கோவிலில் நின்றும் 3 யானைகள் அணிவகுப்புடன் செண்டை மேளம் முழங்க மூலவருக்கு அபிஷேகம் செய்யவதற்க்கான தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பிறகு 10 மணியளவில் நவகம், பஞ்சகவ்யம் ஆகிய அபிஷேகங்கள் மூலவருக்கு நடத்தின. 10.30 மணியளவில் பஞ்சாரி மேளம் கிளிமங்கலம் முரளி, வட்டேக்காடு சசி ஆகிய செண்டை மேளம் வித்துவான்கள் தலைமையில் நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. 11 மணிக்கு புஷ்ப அலங்காரம் பூஜையும் மற்றும் உச்ச பூஜையும் நடந்தன. இதையடுத்து கோவில் சன்னதியில் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியான யானையூட்டும் சிறப்பாக நடைபெற்றன. மதியம் 5 மணியளவில் யானைகள் அணிவகுப்புடன் செண்டை மேளம் முழங்க மூலவர் எழுந்தருளும் வைபவவும் நடந்தன. ஹீரோயின் முத்தாரம்மன் கோவில் கருவன்னுர் அய்யப்பன் கோவில் குருவின் தலைமையில் உடுக்கு கொட்டி ஐயப்பன் பாட்டும் நடந்தன. இன்று அதிகாலையில் மூலவருக்கு நடந்த சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவடைகிறது.