பதிவு செய்த நாள்
16
ஜன
2020
11:01
பழநி, பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், தரிசனத்திற்காக நான்கு மணிநேரம் காத்திருந்தனர். பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை காரணமாக பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை நான்கு மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது.மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பழநி கிரிபாதை, மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் பால்குடங்கள், வேல், காவடிகள் எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் வலம் வந்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். அங்கு வெளிப்பிரகாரம் வரை திரண்ட பக்தர்கள் நான்கு மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு தங்கரத புறப்பாட்டை தரிசித்தனர்.