உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரை விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2012 10:04
கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா, சுவாமி,அம்மனுக்கு கொடிமரம் மகாஅபிஷேகம் செய்யப்பட்டு தெய்வேந்திர குருக்கள், நாகநாத குருக்கள் தலைமையில் கொடியேற்றம் நேற்று நடந்தது. சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் பூத வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா நடந்தது. மே 3, மாலை 4.40 மணிக்கு திருக்கல்யாணம்,மே 4ல் மாலையில் திருத்தேர் வலம் நடக்கிறது. திவான் மகேந்திரன், நிர்வாக அலுவலர் சாமிநாதன், பேஷ்கார் சேகர், ஊராட்சி தலைவர் நாகராஜன், அ.தி.மு.க., ஊராட்சி செயலாளர் பழனிமுருகன், பிரதோஷ கமிட்டி தலைவர் ஸ்ரீதர், ஊராட்சி முன்னாள் தலைவர் உத்தண்டவேலு பங்கேற்றனர்.