விழுப்புரம்: விழுப்புரம் அருகே காணையில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் மகரஜோதி விழா நடந்தது.அதனையொட்டி, அய்யப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனையும், தொடர்ந்து முக்கிய வீதிகளில் திருமாடவீதியுலாவும் நடந்தது.அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு, சிறப்பு பூஜை செய்யபட்டு, கோவிலில் உள்ள 20 அடி உயர பீடத்திற்கு மகர ஜோதி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, காணை அய்யப்ப ஆன்மிக பேரவை சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.