பதிவு செய்த நாள்
21
ஜன
2020
11:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா ஜன., 26ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜன., 25 மாலை அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது.
26 ல் காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன் எழுந்தருள்வர். காலை 10:30 முதல் 11:00 மணிக்குள் சிவாச்சார்யார்களால் கொடியேற்றப்படும். பிப்., 3 வரை தினமும் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வர். முக்கிய நிகழ்வாக பிப்., 3 தை கார்த்திகை அன்று காலை தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி முடிந்து 16 கால் மண்டபம் முன் உள்ள சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி தேரோட்டம் நடக்கும். பிப்., 4 காலை ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளம் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருள தெப்பத் திருவிழா நடக்கும். இரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன் சுப்பிரமணிய சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள சூரசம்ஹாரம் லீலை நடக்கும்.