பதிவு செய்த நாள்
21
ஜன
2020
12:01
கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் கிராமத்தில் கோதண்டராமர் வீதியுலா உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் நுாற்றாண்டு பெருமை பெற்ற சக்தி மாரியம்மன் கோவிலில், கல்கோபுரம், கல்மண்டபம் அமைத்து முன் மண்டபம் கட்டும் திருப்பணி நடந்து வருகிறது.
கோவில் கும்பாபிேஷகம் எவ்வித குறைபாடியின்றி நடக்க கோதண்டராமரை பிரார்த்தனை செய்து உற்சவம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, சீதை, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு கலசாபிேஷகம் செய்து பூஜை நடந்தது.தொடர்ந்து, உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா உற்சவம் நடந்தது. பெண்கள் கோலாட்டம், கும்மியடித்துச் சென்றனர். ராமர் பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடிச் சென்றனர். கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவர் சிவசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் பூஜைகளை நடத்தினர். நீலமங்கலம் கிராம மக்கள் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.