பதிவு செய்த நாள்
21
ஜன
2020
01:01
திருப்பூர்: திருப்பூர் ஆதிஸ்வரா டிரஸ்ட் சார்பில், திருமந்திரம் முற்றோதுதல் நிகழ்ச்சி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது. திருப்பூர் பனிரெண்டார் திருமண மண்டப டிரஸ்ட், எவரெடி ஸ்பின்னிங் மில்ஸ், ஆதீஸ்வரா டிரஸ்ட் சார்பில், திருமந்திர முற்றோதல் சிந்தனை ஆய்வரங்கள், திருப்பூரில் நடக்க உள்ளது.
தை அமாவாசையான, 24ம் தேதி துவங்கி, 26ம் தேதி மதியம், 2:00மணி வரை, இந்நிகழ்ச்சி நடக்கிறது.பத்தாம் திருமுறையாக உள்ள, திருமூலரின் திருமந்திரம் முற்றோதுதல், வரும், 24ம் தேதி காலை, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வழிபாட்டுக்கு பிறகு, சிவகண வாத்தியங்களுடன், மண்டபத்துக்கு ஊர்வலமாக செல்கின்றனர். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து வரும் சிவனடியார்கள் பங்கேற்கும், திருமந்திரம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கும். பாடல்களின் இடையே, ஆன்மிக அறிஞர்களை கொண்டு, தனித்தனியாக விளக்கம் அளிக்கவும், சிவ வழிபாட்டின் தத்துவத்தை விளக்கும் சொற்பொழிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.