ஜன.19, தை 5: மதுரை செல்லத்தம்மன் யானை வாகனம், ஸ்ரீரங்கம் பெருமாள், மதுரை கூடலழகர் கோயில்களில் திருவாய்மொழி உற்ஸவம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் ஆஞ்சநேயர் திருமஞ்சனம், திருநீலகண்ட நாயனார், தாயுமானவர் குருபூஜை
ஜன.20, தை 6: சுபமுகூர்த்தம், ஏகாதசி விரதம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி திருமஞ்சனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், மதுரை செல்லத்தம்மன் குதிரை வாகனம்
ஜன.21, தை 7: சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், மதுரை செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி, ஸ்ரீரங்கம் பெருமாள் திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்
ஜன.23, தை 9: மாத சிவராத்திரி, மதுரை செல்லத்தம்மன் பட்டாபிேஷகம், கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை சிவன் உற்ஸவம் ஆரம்பம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
ஜன.24, தை 10: தை அமாவாசை, மதுரை செல்லத்தம்மன் தேர், மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம், திருநெல்வேலி நெல்லையப்பர் லட்ச தீபம், ரிஷப வாகனம், ராமேஸ்வரர் ராமபிரான் வெள்ளித் தேர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை