ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடக்கும் விஷயம் சீதைக்கு தெரியாது. 18 நாள் போரின் முடிவில் ராம பாணம் ராவணனை கொன்றது. இந்த வெற்றியை சீதைக்கு தெரிவிக்க அசோகவனத்துக்கு வந்தார் ஆஞ்சநேயர். ஓடி வந்த வேகத்தில் மூச்சிறைத்தது. ‘கண்டேன் சீதையை’ என ராமனுக்கு சொல்லியது போல உடனடியாக சீதையின் முன் கிடந்த மணலில் ‘ஸ்ரீராமஜெயம்’ என எழுதினார். இதைக் கண்ட சீதை மகிழ்ந்தாள். அன்று தொடங்கிய இந்த மந்திரம் பல யுகங்களாகத் தொடர்கிறது. கோடி கோடியாக ‘ ஸ்ரீராம ஜெயம்’ எழுதியும் சொல்லியும் வருகின்றனர். என்றும் அழியாத சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் போல அவர் எழுதிய மந்திரமும் சிரஞ்சீவியாக வாழ்கிறது.