பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், 26 நாட்களில், 58.42 லட்சம் ரூபாயை, உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். பின், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.அந்த வகையில், 26 நாட்களில், பக்தர்கள் அளித்த காணிக்கையை நேற்று முன்தினம், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியலை திறந்து எண்ணினர்.இதில், 58.42 லட்சம் ரூபாய் ரொக்கம், 220 கிராம் தங்கம், 3590 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. ரொக்கத்தை திருத்தணி பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்தும், தங்கம், வெள்ளியை கோவில் பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.