பதிவு செய்த நாள்
02
பிப்
2020
08:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், மகாசக்தி மாரியம்மனுக்கு 5ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், மகாசக்தி மாரியம்மன் கோவிலில், சம்வஸ்திரா அபிஷேக 5ம் ஆண்டு பால்குட விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரன பூஜை, பூர்ணாகுதி நடந்தது.
தொடர்ந்து பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக அம்மன் அருள் பாடி சென்றனர். ஊர்வலத்தின் நிறைவாக அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருலி வீதி உலா நடந்தது. பரனூர் அம்பலவாணன் அபிராமி அந்தாதி வாசித்தார். கோவில் நிர்வாகி சக்தி தலைமையில் தொழிலதிபர்கள் செல்வராஜ், தியாகு, கண்ணப்பன், சாந்திபால், சிவகுருநாதன் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.