பதிவு செய்த நாள்
06
பிப்
2020
11:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று, விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம், காந்தி சாலையில், பழமையான முத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்த திருப்பணிகள் முடிந்த நிலையில், 3ம் தேதி, கணபதி பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று, யாகம் நிறைவு பெற்று, காலை, 9:30 மணிக்கு, யாக சாலையில் இருந்து கலசத்திற்கு, புனித நீர் எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து, 9:45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் மூலவர் சன்னதி விமானம், முருகன், விநாயகர் சன்னிதி கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, சுவாமி வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.