பதிவு செய்த நாள்
07
பிப்
2020
11:02
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டு தோறும் நடைபெறும் தைப்பூசம், நாளை நடைபெறுகிறது. காலை, 10:30 மணிக்கு, வேம்படி விநாயகர் கோவில் முன், பால்குட விழா துவங்குகிறது.
பக்தர்கள், காவடிகளுடன் கிரிவல ஊர்வலம் வந்து, சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்வர். இரவு, சரவண பொய்கை குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், கந்தசுவாமி எழுந்தருள்வார். சின்ன காஞ்சிபுரம், கே.எம்.வி., நகரில், 18ம் ஆண்டு, தைப்பூச தீபஜோதி தரிசனம், நாளை நடைபெறுகிறது.
அதேபோல், உத்திரமேரூரில் உள்ள ஸ்ரீகுபேர பாலமுருகன் கோவில் தைப்பூச பாதயாத்திரை முருக பக்தர்கள், பாதயாத்திரையாக, நேற்று, திருத்தணிக்கு புறப்பட்டனர். நாளை, திருத்தணியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில், இவர்கள் பங்கேற்பர்.ஆத்தனஞ்சேரியில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை, இன்று துவக்குகிறது.