வாலாஜாபேட்டை: உலக மக்கள் நன்மைக்காக, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று ருத்ர ஹோமம் நடந்தது. இதையொட்டி, மஹாவீரர், அகத்தியர், ராமகிருஷ்ணர் ஆகிய சுவாமி சிலைகள், கோவிலில் புனர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் மூலமந்திர ஹோமம் கலச புறப்பாடு, கலசாபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.