பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
10:04
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவுக்கு தேவையான வசதிகள் செய்து தர, மாநகராட்சி சார்பில் ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் பகுதியில், தற்காலிக பாலம் அமைக்க ரூ.15 லட்சம், ஆழ்வார்புரம் மற்றும் ராமராயர் மண்டப மின்வசதிக்கு ரூ.5 லட்சம், விழாவிற்கு வருவோரின் குடிநீர் வசதிக்கு 50 இடங்களில் குடிநீர் தொட்டி வைக்க, ரூ.5 லட்சம், தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணிக்கு ரூ.6 லட்சத்து எட்டாயிரம், துப்புரவு உபகரணங்கள் ரூ.6 லட்சம், துப்புரவுப்பணிக்கான பூச்சிக்கொல்லி மருந்துகள், சுண்ணாம்புத்தூள் ரூ.10 லட்சம், விளம்பர பிரசாரம் ரூ.50 ஆயிரம், துப்புரவு தொடர்பாக ஏற்படும் அவசர செலவீனத்திற்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம், என, ரூ.47 லட்சத்து 83 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது நிதியிலிருந்து இதை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.