தியாகராஜர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பேட்டரி கார் இயக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2012 10:04
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜஸ்வாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரியில் இயங்கும் காரை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருவாரூர் தியாகராஜஸ்வாமி கோவிலுக்கு வருகை தரும் வயதான பக்தர்கள் கோவிலில் பிரகாரத்தை சுற்றி பார்க்க மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் கார் வடிவமைக்கப்பட்டது. அதை நேற்று காலை கலெக்டர் நடராஜன் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தியாகராஜ ஸ்வாமி சன்னதியில் இருந்து துவக்கி வைத்தார். இதில் தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர்கள் சிவராம்குமார், கஜேந்திரன், நகராட்சி தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.