பதிவு செய்த நாள்
09
பிப்
2020
04:02
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள பரஞ்சோதி அம்மன் கோவிலில், ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மன் நேற்று எழுந்தருளினர்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பழமையான பரஞ்சோதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, தைப்பூசம் அன்று ஏகாம்பரநாதர் எழுந்தருள்வது வழக்கம்.இதைத் தொடர்ந்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, ஏகாம்பரநாதர் பரஞ்சோதி அம்மன், கோவிலில் எழுந்தருளினார். பின் மதியம், ஏகாம்பரநாதர், ஏழலார்குழலி அம்மனுக்கு, திருமஞ்சனம் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து, அலங்காரம் முடிந்து, இரவு, 9:00 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டார். இவ்விழாவில் அப்பகுதியுள்ள பொது மக்கள் ஏராளமானோர், சுவாமியை தரிசனம் செய்தனர்.