பதிவு செய்த நாள்
11
பிப்
2020
03:02
நற்பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே!
இந்த மாதம் சுக்கிரன் மார்ச்1 முதல் சாதகமான நிலைக்கு வருகிறார். புதன் பிப்.22 – மார்ச் 11 வரை சுக்கிரன் வக்ரமாக இருந்தாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். மேலும் சூரியன், குரு, ராகு மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உங்களின் ஆற்றல் மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூக செல்வாக்கு சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரம் மேம்படும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உண்டாகும். மார்ச்1 க்கு பிறகு பெண்களால் முன்னேற்றம் காணலாம். பொன், பொருள் சேரும்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் காண்பர். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்து, விழா என குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். கேதுவால் சிலரது வீட்டில் களவு போக வாய்ப்புண்டு. உடல்நிலை சிறப்பாக இருக்கும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிப்.22 – மார்ச் 11 வரை பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.
* வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரித்த வண்ணம் இருக்கும். விண்ணப்பித்த வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் அடைவர்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் புதனின் பலத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் பெறுவர். சக ஊழியர்கள் மிகவும் ஒத்துழைப்பர். மேலதிகாரிகளின் ஆதரவால் வளர்ச்சி காண்பர்.
* ஐ.டி., துறையினருக்கு பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். விரும்பிய சலுகை கிடைக்கும்.
* மருத்துவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த பின்னடைவு மறையும். தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* வக்கீல்கள் பிரச்னையில் இருந்து விடுபடுவர். தாங்கள் எடுத்து நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர். * ஆசிரியர்களுக்கு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான காலகட்டம். கோரிக்கைகள் பெருமளவில் நிறைவேறும்.
* கலைஞர்களுக்கு மார்ச்1 க்கு பிறகு செயலில் தடை விலகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று வருமானம் காண்பர். * விவசாயிகள் நெல், உளுந்து, பாசி பயறு, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், பழ வகைகள் மூலம் அதிக ஆதாயம் அடைவர். காய்கறி மூலம் கூடுதல் மகசூலைப் பெறுவர்.
* பள்ளி,கல்லுாரி மாணவர்கள் படிப்பில் சிறந்த நிலையை அடைவர். ஆசிரியர்களின் ஆலோனையை ஏற்று முன்னேறுவர். கல்வி உதவித்தொகை கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பை பெறுவர்.
சுமாரான பலன்கள்
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் வீண் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் விஷயமாக வெளியூரில் தங்க நேரிடலாம். * * அரசியல்வாதிகள் தடைகளை சந்திக்க நேரலாம். எதிரிகள் மீது ஒரு கண் வைப்பது நல்லது.
* பொதுநல சேவகர்கள் பண விஷயத்தில் விழிப்பாக இருப்பது அவசியம்.
* விவசாயிகளுக்கு சொத்து வாங்க அனுகூலம் இல்லை. வழக்கு, விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம். கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
நல்ல நாள்: பிப்.13,14,15,21,22,23,24,25,28,29, மார்ச் 4,5,10,11,12,13
கவனநாள்: சந்திராஷ்டமம் பிப்.16,17
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: பச்சை, மஞ்சள்
பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
* தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
* வெள்ளிக்கிழமையில் சுக்கிரனுக்கு அர்ச்சனை