பதிவு செய்த நாள்
21
பிப்
2020
01:02
ஓமலூர்: சூரிய கதிர், லிங்கத்தை வழிபடும் அரிய நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. தாரமங்கலம், கைலாச நாதர் கோவிலில், பிப்., 21(இன்று) முதல், 23 வரை, மாலையில் சூரிய ஒளி, கோபுரம் வழியாக நந்தி மீது பட்டு, கருவறையில் நுழைந்து, சிவலிங்கம் மீது விழும் அரிய நிகழ்வு நடக்கவுள்ளது. இன்று, மகா சிவராத்திரி, பிரதோஷத்துடன், சூரிய ஒளி விழும் நிகழ்வு என்பதால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.