பதிவு செய்த நாள்
24
பிப்
2020
11:02
காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவிலில், அன்னப்பாவாடை உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், காய், பழங்கள், உணவு வகைகள் சுவாமிக்கு படைக்கப்பட்டன.
காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது. பாராட்டு விழாஇதில், திருவாசகம் முற்றோதல், சுவாமிக்கு அன்னப்பாவாடை உற்சவம், அத்தி வரதர் வைபவத்தின் போது கைங்கர்யம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற்றன.இதில், திருவாசம் முற்றோதல் நிகழ்ச்சியில், சிவ தாமோதரன் பங்கேற்று, பக்தர்களுக்கு இன்னிசை விருந்து அளித்தார்.காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும், ஏகாம்பரநாதர் உற்சவர் சன்னதியில், அன்னப்பாவாடை உற்சவம் நடைபெற்றது. இதில், காய்கறிகள், பழங்கள், உற்சவர் சன்னதியில் தோரணமாக கட்டி தொங்க விட்டிருந்தனர். அன்னதானம்மற்றும் பலவகை உணவுகள், சுவாமிக்கு முன் படையல் வைக்கப்பட்டன. நேற்று காலை, 9:00 மணி முதல், பகல், 12:00 மணி வரை, பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.இதை தொடர்ந்து, கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அவற்றை பிரசாதமாக வழங்கினர்.மாலையில், அத்தி வரதர் வைபவத்தின் போது கைங்கர்யம் செய்த தொண்டர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.