‘இறந்து போன மனிதர்களின் நல்ல விஷயங்களை மட்டும் பேசுங்கள். அவரைப் பற்றிய தீமைகளைப் பேசாதீர்கள். ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தாலோ, வீண்பழி சுமத்தினாலோ உண்டாகும் பாவம், யார் அந்தச் செயலை முதலாவதாகத் தொடங்கினாரோ அவரையே சாரும். ஒரு மனிதரை நிந்தித்தால் அந்த பாவம் வானத்திற்குச் செல்லும். அங்கே... வானத்தின் கதவுகள் மூடியிருக்கும். பின்னர் அது வலப்புறம், இடப்புறம் அலைந்து திரியும். எங்குமே அதற்கு இடமில்லாமல் எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேரும்’’ என்கிறார் நாயகம். ‘புறம் பேசுதல்’ என்பது ஒருன் தன் இறந்து போன சகோதரனின் இறைச்சியைப் புசிப்பதற்குச் சமம்” என்கிறது குர்ஆன். ஒருவர் இறந்த பிறகும் அவரை கண்ணியமாக பேசி மதிக்க வேண்டும் என்கிறது இஸ்லாம்.