பதிவு செய்த நாள்
02
மார்
2020
10:03
திருத்தணி;திருத்தணி முருகன் கோவிலில், மாசி கிருத்திகை விழாவில், மலைக் கோவிலில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில், 8 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 28ம் தேதி மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேர்த்தி கடன்நேற்று, பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் மற்றும் மாசி கிருத்திகை விழாவையொட்டி, ஆடிக் கிருத்திகைக்கு வரும் பக்தர்கள் போல், மலைக்கோவிலில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.சில பக்தர்கள் மொட்டை அடித்தும், மயில், மலர் மற்றும் பால் காவடிகளுடன் அலகு குத்தி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.அதிகாலை, 5:30 மணி முதல், இரவு, 9:30 மணி வரை பக்தர்கள் மலைக்கோவிலில் தொடர்ந்து குவிந்து வந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.அதே போல், சிறப்பு டிக்கெட் கட்டணமான, 150, 100 மற்றும் 25 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள், 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.நெரிசல்மலைக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், தரிசனத்திற்கு செல்லும் வழி மற்றும் வெளியேறும் வழிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.இதனால், பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உற்சவர் முருகப் பெருமானுக்கு, காவடி மண்டபத்தில், காலை, 9:30 மணிக்கு பஞ்சாமிர்தம் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது.வீதியுலாமேலும், பிரம்மோற்சவ விழா என்பதால், காலையில், சிம்ம வாகனத்திலும், இரவு, ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் உற்சவர் முருகப் பெருமான் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.