பதிவு செய்த நாள்
02
மார்
2020
10:03
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவில் பிரமோற்சவத்தில், நேற்று, தங்க சிம்ம வாகனத்தில், அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. முதல் நாள் காலை, அம்மன் வெள்ளி விருஷப வாகனத்தில் எழுந்தருளி, ராஜவீதி பவனி வந்தார். தினசரி, காலை, இரவு, வெவ்வேறு வாகனங்களில், அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இந்த திருவிழாவின் பிரதான உற்சவமான தங்க சிம்ம வாகனத்தில் அம்மன், நேற்று எழுந்தருளினார். இரவு, யானை வாகன உற்சவம் நடைபெற்றது.இன்று, காலை, தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடைபெறும். தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.