சோமவார பிரதோஷம்; சகல தேவதைகளும் ஈசனை வழிபடும் காலம்.. சிவனை வழிபட கஷ்டங்கள் யாவும் விலகும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2025 10:11
பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது. சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம் இது. பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது சிறப்பான பலன் தரும். குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் யாவும் நீங்கும்! பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது. இன்று சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை!