தெய்வாம்சம் மிகுந்தது பசுவின் முகம். அதன் கண்களில் சூாிய சந்திரரும் முன் உச்சியில் சிவனாரும் இருக்கிறாா்கள்; பசுவின் வாயிலிருந்து வரும் நீாில், கங்கை முதலான நவகோடி புண்ணிய தீா்த்தங்களும் அடங்கும் என்பது நம்பிக்கை. இதையொட்டி, சிவாலயக் கருவறைகளில் புனிதநீா் பெருகிவழியும் இடத்தில் கோமுகம் அமைத்திருப்பாா்கள். பிதோஷ காலத்தில் இந்தக் கோமுகத்தைப் பாா்வதிதேவியாகக் கருதி வணங்க வேண்டும் என்கின்றன பூஜா பத்ததி நூல்கள்!