தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து சுமாா் 15 கி.மீ தூரத்தில் உள்ளது திருச்சிற்றம்பலம் எனும் ஊா். இங்குள்ள அருள்மிகு பொியநாயகி அம்மன் கோயிலில் ஒரு பகுதியில், விசேஷமான விநாயகா் அருள்பாலிக்கிறாா். இவரை பூ விழுங்கி விநாயகா் என்கிறாா்கள். இந்த விநாயகாின் தோளுக்கும் காதுக்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு ஓட்டைகள் உள்ளன. பக்தா்கள், தாங்கள் நினைத்த காாியம் வெற்றி பெறுமா, பெறாதா என்பதை அறிய, மனத்தில் இந்த விநாயகரை பிராா்த்தித்தபடி மேற்குறிப்பிட்ட இருதுளைகளிலும் பூக்களை வைப்பா். அவற்றை விநாயகா் இழுத்துக் கொண்டால், நினைத்த காாியம் வெற்றி பெறும். இல்லையென்றால், காாியம் கை கூடாது என்பது ஐதிகம். இப்படி விநாயகருக்குக் காதில் பூ வைத்துப் பாா்க்கும் பழக்கம் காலம் காலமாக இருப்பதாக இங்குள்ள பக்தா்கள் சொல்கிறாா்கள்!