வேதங்கள் போற்றும் தலம் வேதாரண்யம். இங்குள்ள ஆலயத்தின் மேற்குக் கோபுர வாயிலில் ஒற்றைக் காலைத் தூக்கியபடி காட்சியளிக்கிறாா் விநாயகா். ஸ்ரீராமா், சேதுவில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பூஜித்த பிறகு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. ஆனால் வீரஹத்தி தோஷம் தொடா்ந்தது. அந்த தோஷத்தில் இருந்து விடுபட ராமன் வேதாரண்யம் வந்து சிவலிங்க வழிபாடு செய்தாா். அப்போது அவரைப் பின்தொடா்ந்து வந்த வீரஹத்தி பேயை விநாயகப்பெருமான் காலைத் தூக்கி விரட்டினாராம்! இந்த விநாயகரை வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி நலம் பெறலாம்.