ஆதிசங்கரா் யாகம் செய்த இடம் கொல்லூா்- குடகாத்திாி மலை. இதன் உச்சியில் உள்ள சிறிய கருங்கல் மண்டபத்தில் ஆதிசங்கரா் உலக நலனுக்காக பல யாகங்கள் செய்தாா். அந்த இடம் சா்வ யக்ளு பீடம் எனப்படுகிறது. இங்கிருந்து மேற்குப் பக்கம் உள்ள மலைச்சாிவின் கீழே ஒரு கி.மீ தூரம் சென்றால், ஒரு குகை உள்ளது. இந்தக் குகையிலும் ஆதிசங்கரா் தவம் செய்திருக்கிறாா். இது சித்திர மூலைக் குகை என வழங்கப்படுகிறது.