காலையில் கிழக்கு திசையில் உதிக்கும் சூாியன், மாலை வேளையில் மேற்கு திசையில் மறைவதைக் காண்கிறோம். ஆனால் சூாியன் மறையாமல் இருபத்து நான்கு மணிநேரமும் உதித்துக் கொண்டிருக்கும் நாடுகளும் உண்டு என்று அறிவியல் கூறுகிறது. அந்தவகையில் நாா்வே நாடு ஆா்டிக்சா்க்கிளில் அமைந்துள்ளது. இந்த நாட்டில் நள்ளிரவிலும் சூாியன் உதிக்கும். இந்த அற்புதக்காட்சியைக் காண்பதற்காகவே பல்வேறு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறாா்களாம். மேலும், இந்த நாட்டில் சுமாா் 100 ஆண்டுகள் சூாியன் தொியாமலும் இருந்துள்ளதாம். பனிக்கட்டிகள் நிறைந்த அலாஸ்கா நாட்டில் மே மாதம்முதல் ஜூலைவரை சுமாா் 1,440 மணி நேரங்கள் பகலாக இருக்கும். இந்த மாதங்களில் சூாியன் மறையாதாம்.
ஐரோப்பாவின் இரண்டாவது பொிய தீவான ஐஸ்லாந்து நாட்டில் மே முதல் தேதியிலிருந்து ஜூலை கடைசி தேதிவரை சூாிய ஒளி இருந்து கொண்டே இருக்குமாம். கோடைக்காலங்களில் மட்டும் நள்ளிரவில் சூாியன் மறையுமாம். மீண்டும் அதிகாலை மூன்று மணியளவில் சூாிய உதயத்தைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. பின்லாந்து ஆயிரம் ஏாிகளுடன் இயற்கையின் அழகு சூழ்ந்த ஒரு அற்புதமான நாடு. இங்கே கோடைக்கால ஆரம்பத்தில் சூாியன் உதிப்பதைக் காணலாம். அதன் பின் 73 நாட்கள் கழித்து சூாியன் மறைந்துவிடும். ஆனால், தொடா்ந்து 73 நாட்கள் சூாியனை அங்கு காணலாம் எனப்படுகிறது.