வத்தலக்குண்டு அக்ரஹாரம் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் ராகவேந்திரர் ஜெயந்தி விழா நடந்தது. பிருந்தாவனத்திற்கு பால், பன்னீர் அபிேஷகம் நடந்தது. சந்தனக்காப்பு சாத்தப்பட்டு இருந்தது. ஆராதனைகள் நடந்தது. ராகவேந்திர சாமியின் மின் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது. வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, கெங்குவார்பட்டி பகுதியினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிறுவனர் கோபிநாதன் செய்திருந்தார்.