திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் தசாவதார கோலத்தில் அம்மன் காட்சியளித்தார்.ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிப்.20 ல் பூத்த மலர் பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் (மார்ச் 7) இரவு நடந்த தசாவதார நிகழ்ச்சியில் அம்மன் காளி அவதாரம் எடுத்து சூரனை வதம் செய்தல், கூர்ம, மச்ச, ராமர், கிருஷ்ணர், காளிங்கநர்த்தனம், மோகினி ஆகிய அவதாரங்களில் காட்சியளித்தார். விடிய விடிய நடந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (மார்ச் 9) ஊஞ்சல் உற்வசம், நாளை (மார்ச் 10) தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.