என்ன தேவை: அரிசி – 200 கிராம் தேங்காய் – 1/2 மூடி வெல்லம் – 150 கிராம் நெய் – 2 ஸ்பூன் உப்பு – 1/4 ஸ்பூன் செய்வது எப்படி: அரிசியை களைந்து வடித்து, நிழலில் உலர்த்தி அரைக்கவும். வறுத்து ஆற வைத்து சலிக்கவும். இத்துடன் சிறிது உப்பு கரைசல் தண்ணீரை ஊற்றி, உதிரும் பக்குவத்தில் பிசைந்து, பெரிய துவாரமுள்ள சல்லடையில் சலிக்கவும். பின்னர் இந்த மாவை ஆவியில் வேக வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். வெல்லத்தை துாள் செய்து கரைக்கவும். வேக வைத்த மாவுடன் வெல்லக் கரைசல், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துக் கிளறவும். இதை நீள உருண்டையாக செய்து ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைக்க மோதகம் தயார்.