* நல்லவர் ஒருவரும் இல்லாத நிலையில் உலகில் மழை பெய்வது நிற்கும். * எண்ணம், சொல், செயலால் மனிதன் அடக்கத்தை பழக வேண்டும். * கடவுளுக்கு படைத்த பின்னரே தினமும் உணவைச் சாப்பிட வேண்டும். * தர்ம வழியில் தேடிய பணத்தில் வேதம் விதித்த கடமைகளைச் செய்ய வேண்டும். * எப்போதும் கடவுளின் திருநாமம் சொல்வோருக்கு குறையேதும் ஏற்படாது. * தர்மம் என்னும் தோணியில் பயணித்தால் வாழ்க்கை என்னும் கடலை எளிதாக கடக்கலாம். * பேராசை கொண்டவனுக்கு அறிவு ஒருபோதும் வேலை செய்யாது. * கோபத்தை குறைத்தால் எல்லா துன்பங்களில் இருந்து விடுபட முடியும். * புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூடத் தடுமாறச் செய்யும். * தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவனுக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படாது. * வேதத்தின் முடிவு உண்மை. உண்மையின் முடிவு அடக்கம். அடக்கத்தின் முடிவு மோட்சம். இதுவே முடிவான தீர்மானம். * கலியுகத்தில் செய்யும் தவம், பிரம்மசரியம், ஜபத்தால் குறுகிய காலத்தில் அதிக பலன் கிடைக்கும். * தர்மம் இருக்குமிடத்தில் தான் கடவுள் வாழ்கிறார். * சந்தேகம் இன்றி கடவுளைச் சரணடைது ஒன்றே கல்வியின் பயன். * வேதம் வகுத்த முறைப்படி கட்டுப்பாடு மிக்கதாக வாழ்வு இருக்க வேண்டும். * வீண் பேச்சை தவிர்த்து பயனுள்ளதை மட்டும் பேச வேண்டும். * உயிருடன் இருக்கும் வரை ஒருவனின் பிறவிக்குணம் மாறுவதில்லை. - சொல்கிறார் வியாசர்