தருமபுரம் ஆதீனம் விசுவ இந்து பரிஷத் செயலாளர் சந்திப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2020 01:03
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை அகில இந்திய விசுவ இந்து பரிஷத் செயலாளர் அசோக் திவாரி சந்தித்து பேசினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர ஆதீனத்திற்கு வந்த அகில இந்திய விஷ்வ இந்து பரிஷத் செயலாளர் அசோக் திவாரி ஆதீனம் 27வது குருமகா சன் னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளை சந்தித்துப்பேசினார். அப்போது அவர் கடந்த ஜனவரி மாதம் பிரயாக்கில் நடந்த தர்மசம்சத்தின் தீர்மானங்கள் கு றித்து விளக்கினார். தொடர்ந்து நாடு முழுவதும் இந்து சனாதன தர்மத்தை போற்றிப்பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளவுள்ள செயல் திட்டங்கள் குறித்தும் பேசினார். தருமை ஆதீனத்தின் தமிழ் பணி, சைவ பணிகள் குறித்து ஆங்கில மொழி நூலை அசோக் திவாரிக்கு ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் வழங்கினார். அப்போது அகில பாரதிய சன் யாசிகள் சங்க துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா, பொருளாளர் ஸ்ரீமத் வேதாந்த ஆனந்தா ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து தருமை ஆதீன பூஜை முறை மற்றும் வெளியிட்டுள்ள நூல்கள் குறித்தும், ஆதீனத்தின் குருபரம்பரை மற்றும் சைவ சமய பணிகள் குறித்தும் விஷ்வ இந்து பரிஷத் அகில இந்திய செயலாளர் அசோக் திவாரி பார்வையிட்டார். அப்போது ஆதீனம் மீனாட்சிசுந்தரம் தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தார். பின்னர் அசோக் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நமது நாட்டில் அடிப்படையான பசுமாடுகளை பாதுகாக்கும் வகையில் காமதேனு திட்டத்தை மத்திய அரசு செயல்ப டுத்துவதும், காஷ்மீரில் 370வது பிரிவு தனி சட்டத்தை நீக்கி காஷ்மீர் மக்களை தேசத்துடன் இனணத்ததுள்ளதற்கும், ராம ஜென்ம பூமியில் ராமர் கோயிலை அமைக்க அறக் கட்டளையை உருவாக்கிய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். சிஏஏ. நாட்டின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை நாடு முழுவதும் தர்மத்தின் பக்கம் உள்ள அனைத்து மக்களும் வரவேற்கின்றனர்.
கும்பகோணத்தில் நடந்த மாசிமக சன்னியாசிகள் சங்கமம் மற்றும் மகாமக குளத்தில் நடந்த ஆரத்திவிழாவில் பல்வேறு சம்பிரதாயங்களைகொண்ட துறவியர்கள் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. தருமை ஆதீனம் சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் மடம் சுவாமிகள், ஜீயர் சுவாமிகள், ராமகிருஷ்ண மடம் சுவாமிகள், வேதாந்த மடம் சுவாமி கள் உள்ளிட்ட பலரை சந்தித்து ஆசி பெற்றோம். தமிழக மக்களிடையே ஆன்மீக எழுச்சி அதிகமாக உள்ளது. அதனை வாழ்வில் தினமும் செயல் வடிவில் கொண்டுவர துற விகள் வழிகாட்டி ஆசிர்வதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். தமிழக மக்களின் கலாச்சாரம் மிகவும் போற்றத்தக்கதாக இருப்பதை உணர்ந்தேன்.
தற்போது மக்களிடையே மேலைநாட்டு கலாச்சாரத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் சமுதாயத்தில் ஜாதி வேறுபாடுகளை கடந்து மக்கள் சிறப் பாக வாழ வழிவகை செய்ய வேண்டும். அதற்கு கிராமங்கள் தோறும் துறவிகள் மக்களுடன் தங்கியிருந்து இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். ஒவ்வொரு குடும்பத் தினரும் நமது பண்பாடு, கலாச்சாரத்தோடு குழந்தைகளை வளர்க்கவும், சமுதாயத்தில் தர்மத்தை நிலை நிறுத்தக்கூடிய செயல்பாடுகளை மேலோங்கச் செய்யவும் பணியாற்ற வேண்டும் என்றார்.