திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் பெரும்பாலான தெருவிளக்குகள் எரியாததால் கிரிவலம் சென்ற பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பரங்குன்றம் மலையை சுற்றி 3.25 கி.மீ., கிரிவல பாதை உள்ளது. பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குன்றத்தில் கிரிவலம் செல்கின்றனர். நேற்று கிரிவல பாதையில் பெரும்பாலான தெரு விளக்குகள் எரியவில்லை. அவனியாபுரம் ரோடு பிரிவிலிருந்து பசுமடம் வரையில் குடியிருப்புகள் இல்லாததால் கிரிவலப்பாதை இருட்டாக இருந்தது. இதனால் கிரிவல பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பவுர்ணமி தினத்தன்றாவது கிரிவல பாதையில் தெருவிளக்குகள் எரிய மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.